தினத்தந்தி புகார் பெட்டி

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

Update: 2022-03-24 19:46 GMT
 குடிநீர் வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே இளங்கார்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த தெருவில் உள்ள குடிநீர் குழாயில் குடிநீர் வருவது இல்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அருகில் உள்ள குடிநீர் தொட்டியும் பழுதாகி உள்ளது. இதனால் குடிநீருக்காக பொதுமக்கள் பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.             
-ராஜேஸ்கண்ணா, இளங்கார்குடி.
 ஆபத்தான மின்கம்பம் 
திருப்பனந்தாளில் இருந்து பந்தநல்லூர் செல்லும் சாலை எப்போதும் பரபரப்புடன் அதிக மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும். இந்த பகுதியில் உள்ள மின்கம்பம் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த மின்கம்பம் எந்தநேரத்திலும் விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
-கல்யாணகுமார், திருப்பனந்தாள்.

மேலும் செய்திகள்