காட்சிப்பொருளான பயணிகள் நிழற்குடை

பயணிகள் நிழற்குடை காட்சிப்பொருளாக உள்ளது.

Update: 2022-03-24 19:43 GMT
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் (தவிட்டுபாளையம் முதல் கரூர் செம்மடை வரை) பயணிகளின் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பயணிகள் நிழற்குடை பஸ் நிறுத்தம் அருகே கட்டாமல் சம்பந்தமில்லாத இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பஸ் நிழற்குடைக்கு செல்லாமல் பஸ்கள் நிற்கும் இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கில் செலவு செய்த பயணிகள் நிழற்குடை யாருக்கும் பயன்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே பயணியர் நிழற்குடை உள்ள இடத்தில் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்