மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவில் அக்னிசட்டி எடுத்து பூக்குழி இறங்கிய பக்தர்கள்

மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

Update: 2022-03-24 19:08 GMT
மானாமதுரை 
மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் பூக்குழி இறங்கினர். 
சிறப்பு பூஜை
மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி கடந்த 16-ந் தேதி கொடியற்றம் நடந்தது. முத்துமாரி அம்மனுக்கும் கோவில் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினர்.
விழாவின்போது மண்டகப்படிதாரர்கள் சார்பில் முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. 
பூக்குழி
முக்கிய நிகழ்ச்சியான நேற்று பொங்கல் விழாவையொட்டி ஏராள மான பக்தர்கள் மானாமதுரை வைகை ஆற்றில் இருந்து பால்குடங்கள், அக்னிச்சட்டிகள் எடுத்து மேள தாளத்துடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மன் சன்னதி எதிரே பூக்குழி இறங்கினர். பலர் மாவிளக்கு பூஜை, பொங்கல் வைத்து படைத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏற்பாடுகளை பூசாரி சுப்பிரமணியன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்