அரசமலை பகுதியில் பலத்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

அரசமலை பகுதியில் பலத்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2022-03-24 18:52 GMT
காரையூர்:
காரையூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென்று காரையூர் அருகே உள்ள அரசமலை சுற்றுவட்டார கிராமங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் மழைநீர் பெறுக்கெடுத்து ஓடியது. 
இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்