கல்லூரி மாணவியை மிரட்டி கவரிங் நகையை பறித்து சென்ற வாலிபர் கைது

அரக்கோணத்தில் கல்லூரி மாணவியை மிரட்டி கவரிங் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-24 18:46 GMT
அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். 

இவர் நேற்று காலை கல்லூரி செல்வதற்காக அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் மாணவியை வழிமறித்து என்னுடன் பேச மாட்டாயா என கேட்டுள்ளார். 

அதற்கு மாணவி உன்னுடைய நடவடிக்கை சரியில்லை அதனால் விருப்பமில்லை என கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி, மாணவி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் செயினை பறித்து சென்றுள்ளார். 

இது குறித்து மாணவி அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை மிரட்டி, கவரிங் நகையை பறித்து சென்ற அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீசன் மகன் சோபன் (வயது 24) என்பவரை கைதுசெய்தனர். 

விசாரணையில் இவர் கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்வர் என்பதும் தெரிய வந்தது.

மேலும் செய்திகள்