விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலியானார்

Update: 2022-03-24 18:03 GMT
சிங்கம்புணரி,
மதுரை மாவட்டம் கண்டுக்க பட்டியைச் சேர்ந்தவர் தனுஷ் கோடி மகன் குபேரன் (வயது21). ஜே.சி.பி. ஆப ரேட்டராக பணி புரிந்து வந்தார். இவர் நேற்று சிங்கம்புணரி அருகே சூரக்குடி கோவில்பட்டி பகுதியில் வேலை சம்பந்த மாக சென்றுள்ளார். அப்போது குபேரனின் அம்மா சாத்தம்மாளை மாடு முட்டியதில் படுகாயமடைந்து சிங்கம்புணரி தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட தகவலறிந்த குபேரன் தனது மோட்டார் சைக்கிளில் சிங்கம் புணரி நோக்கி வேகமாக வந்துள்ளார். அப்போது காளாப் பூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத் தில் சூரக்குடி நோக்கி செல்லும்போது புதுப்பட்டி அருகே கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதியதில் ஜே.சி.பி. ஆபரேட்டர் குபேரன் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ராஜேஷ் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து எஸ்.வி. மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்