கந்திகுப்பம் அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து; ஒருவர் கைது
கந்திகுப்பம் அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து; ஒருவர் கைது
பர்கூர்:
கந்திகுப்பம் அருகே உள்ள செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் மீனா (வயது 36). பெரிய செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் ரவீந்திரன் (46) உறவினர்களான இவர்களுக்குள் சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சினையில் ரவீந்திரன், மீனாவை கத்தியால் குத்தினார். இதுகுறித்து மீனா கொடுத்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீசார் ரவீந்திரனை கைது செய்தனர்.