இறந்து கரை ஒதுங்கிய டால்பின்
வேதாரண்யம் அருகே டால்பின் இறந்து கரை ஒதுங்கி கிடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த மணியன் தீவு கடற்கரையில் நேற்று மாலை 7அடி நீளமும் சுமார் 400 கிலோ எடையுள்ள டால்பின் ஒன்று இறந்து கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் வன காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து டால்பினை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்து கடற்கரையிலேயே புதைத்தனர். இந்த டால்பின் படகில் அல்லது கப்பலில் அடிபட்டு இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.