அங்கன்வாடி மையத்தில் காலாவதியான பொருட்களால் உணவு தயாரிக்கப்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி அங்கன்வாடி மையத்தில் காலாவதியான பொருட்களால் உணவு தயாரிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-03-24 17:11 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சியில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஓட்டல்களில் காலாவதியான பொருட்களால் உணவு தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் (பொறுப்பு) தலைமையிலான அதிகாரிகள் கரியப்பா நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவு தயாரிக்கப்படும் முறைகள், உணவில் சேர்க்கப்படும் பொருட்களின் தரம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். 

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்த அதிகாரிகள், வாடிக்கையாளர்களுக்கு தரமான முறையில் உணவு வழங்கவேண்டும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். 

மேலும் செய்திகள்