பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
விழுப்புரத்தில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் உரிமையில் குறுக்கிடும் தி.மு.க. அரசை கண்டித்தும், இதற்கு துணைபோகும் மாவட்ட அரசு நிர்வாகத்தை கண்டித்தும் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் கலிவரதன், மாநில செயற்குழு உறுப்பினர் சிவதியாகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாண்டியன், ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் சுகுமார், செஞ்சி தொழிலதிபர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தில் மாநில கல்வியாளர் பிரிவு தலைவர் தங்ககணேசன், மாநில இளைஞர் அணி செயலாளர் அஸ்வத்தாமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட துணைத்தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மண்டல தலைவர்கள், அணி பிரிவு தலைவர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர தலைவர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.