ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-03-24 16:47 GMT
நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே தாதநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியரசு (வயது 30). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கின் போது இருந்து தற்போது வரை வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முனியரசு பங்கு சந்தையில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருந்த நிலையில் அதில் பணத்தை இழந்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முனியரசு நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தூங்க சென்றவர் நேற்று காலை வெகுநேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அறையை திறந்து பார்த்தபோது சேலையால் முனியரசு தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சென்ற தொப்பூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஐ.டி ஊழியர் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்