காசநோய் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு

கோவை அரசு ஆஸ்பத்திரியில் காசநோய் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2022-03-24 16:47 GMT
கோவை

காசநோய் பரவல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஆண்டு தோறும், மார்ச் 24-ல், சர்வதேச காசநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட காசநோய் மையம் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். 

இதை கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கிய இந்த பேரணி கலைக்கல்லூரி வழியாக மீண்டும் ஆஸ்பத்திரியை வந்தடைந்தது. இந்தப் பேரணியில் காச நோய் குறித்தும், அதன் அறிகுறிகள் குறித்தும், தடுப்பு வழிமுறைகள் குறித்தும் பதாகைகளை ஏந்தியவாறு 100-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் மாவட்ட காசநோய் மைய அலுவலர்கள் பங்கேற்றனர். 

 இதேபோல் ஆஸ்பத்திரி வளாகத்தில் காசநோய் தின விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தது. அங்கு டீன் நிர்மலா தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் காசநோய் குறித்து மாணவ- மாணவிகள் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்