கால்நடை மருத்துவ முகாம்
வேடசந்தூர் அருகே கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது
வேடசந்தூர்:
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வேடசந்தூர் அருகே உள்ள கரிசல்பட்டி, மந்தகுடும்பன்பட்டி ஆகிய இடங்களில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாம் தொடக்க விழாவுக்கு கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
சென்னை கால்நடை பராமரிப்புத்துறை நோய் நிகழ்வியல் பிரிவு உதவி இயக்குனர் சுந்தர்ராஜன், கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் தாஸ்பிரகாஷ், உதவி இயக்குனர்கள் விஜயகுமார், ஆறுமுகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முகாமில் கால்நடைகளுக்கான சத்து தீவனம் வழங்கப்பட்டது.
மேலும் கால்நடைகளுக்கு குடல்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.