திருவொற்றியூரில் காங்கிரஸ் பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கிய கும்பல்
திருவொற்றியூரில் காங்கிரஸ் பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கிய கும்பலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவொற்றியூர் பாரத் நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் கே.பி.துரை. இவர் திருவொற்றியூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ராஜீவ் காந்தி நகர் 1-வது தெரு மெயின் ரோட்டில் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்கும் கடை உள்ளது. இந்நிலையில், எம்.டி.துரை வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு கடையை மூடிய பின்னர், தனது காரை கடை முன்பு நிறுத்தி விட்டு வீட்டிற்கு வந்து விட்டார்.
இதற்கிடையே, நேற்று அதிகாலை கடைக்கு திரும்பி வந்து பார்த்தபோது, அவரது கார் கண்ணாடியை மர்ம கும்பல் அடித்து நொறுக்கி விட்டு, கடை முன்னால் வைக்கப்பட்ட பழைய பிரிட்ஜ், வாஷிங் மெஷின் பொருட்களை நடுரோட்டில் வீசி எறிந்து விட்டு சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து எண்ணூர் போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.