ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது

ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது

Update: 2022-03-24 10:52 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது நண்பர் அசோக்குமார் என்பவரை காரில் அழைத்துக்கொண்டு திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்தார். பின்னர் இரவு பொள்ளாச்சிக்கு காரில் இருவரும் புறப்பட்டனர். 
பல்லடம்-பொள்ளாச்சி ரோட்டில் வடுகபாளையம் கால்நடை மருத்துவனை அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது  காரின் முன்பக்க என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் இருவரும் உடனடியாக காரில் இருந்து குதித்து உயிர் தப்பினர். 
பின்னர் காரில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. உடனே பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் குமார் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும்  எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தசம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்