உடுமலைதளி பிரதான சாலையில், சாலையின் இரண்டு புறமும் வரிசையாக ஏறானமான புளிய மரங்கள் உள்ளன. இந்த சாலையில் போடிபட்டி ஊராட்சி உள்ளது.
இங்கு போடிபட்டிபுதூர் பகுதியில் தளி சாலையில் உள்ள ஒரு புளிய மரத்தின் கீழ்பகுதி பாதி அளவு அரிக்கப்பட்டுள்ளது.மீதி உள்ள பகுதியும் பழுதடைந்த நிலையில், அந்த சிறிய பிடிமானம் தான்மரத்தின் முழு எடையையும் தாங்கி நிற்கிறது. போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் வாகனங்கள் அதிகம் சென்று வரும்.மேலும் இந்த பகுதியில் வணிக நிறுவனங்கள் உள்ளன.அத்துடன் குடியிருப்புகளுக்கு செல்லும் வழியாகவும் உள்ளது. அதனால் கீழ்பகுதி பழுதடைந்துள்ள அந்த புளிய மரத்தை வெட்டி அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---