சங்கரன்கோவில் நகராட்சிக்கு அரசு போக்குவரத்து கழக பணிமனை ரூ.60 லட்சம் வரி நிலுவை

அரசு போக்குவரத்து கழக பணிமனை ரூ.60 லட்சம் வரி நிலுவை

Update: 2022-03-23 22:19 GMT
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையின் சார்பில் சொத்து வரி, தொழில் வரி ஆகியவை மொத்தம் சுமார் ரூ.59 லட்சத்து 89 ஆயிரத்து 945 செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் வரி நிலுவைத்தொகையை செலுத்த வலியுறுத்தி, நகராட்சி ஆணையாளர் ஜெயப்பிரியா மற்றும் அதிகாரிகள் நேற்று சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்றனர்.
அப்போது 2021-2022-ம் ஆண்டிற்கான சொத்துவரி பாக்கி ரூ.57 ஆயிரத்தை இன்று (வியாழக்கிழமை) செலுத்துவதாகவும், தொழில் வரியை செலுத்த கால அவகாசம் வழங்குமாறும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதற்கிடையே நகராட்சி தலைவர் உமாமகேசுவரியும், அரசு போக்குவரத்துக்கு கழக பணிமனைக்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அனைவரும் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்