சிவகிரி நகரப்பஞ்சாயத்து கூட்டம்
சிவகிரி நகரப்பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது
சிவகிரி:
சிவகிரியில் நகரப்பஞ்சாயத்து கவுன்சிலர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது. தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக உலக வனநாளை முன்னிட்டு வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன் முத்தையா பாண்டியன், தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) மணிகண்ட பிரபு ஆகியோர் நகர பஞ்சாயத்து வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டினர். வனவர் மகேந்திரன், வனக்காப்பாளர் அருண்மொழி பிரதீப், வேட்டை தடுப்பு காவலர்கள், ஆனந்த், மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.