திசையன்விளை அருகே மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தல்
மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூர் பஞ்சாயத்து தெற்கு புலிமான்குளத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்க பள்ளி உள்ளது. மிகவும் பழமையான இந்த பள்ளி கட்டிடம் மேல் கூரை ஓடுகளால் ஆனது. இந்த கிராமத்தில் உள்ள மூன்று தலைமுறையினர் இந்த பள்ளியில் பயின்றுள்ளனர்.
தற்போது கட்டிடம் மேல்கூரை ஓடுகள் உடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது. மேல் கூரையில் உள்ள மரங்களை கரையான் அரித்துள்ளது. ஓடுகள் உடைந்து சூரிய ஒளி வகுப்பறைக்குள் விழுகிறது. கட்டிட சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு உள்ளது. எனவே பள்ளிக்கூடத்துக்கு, புதிய கட்டிடம் கட்டித்தரக்கோரி அரசுக்கு பலமுறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடந்த 21-ந் தேதி முதல் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்