புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் தட்டுப்பாடு
விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு காரணமாக அருகில் உள்ள கிராமத்தில் இருந்து குடிநீர் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தரமற்ற குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் மக்களின் குடிநீர் தட்டுப்பாடை ேபாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாாிமுத்து, தம்பிபட்டி.
போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதியில் பகலில் கனரக வாகனங்கள் அதிக அளவில் வருவதால் கடுமையான ேபாக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்களும், வேலைக்கு செல்லுபவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பகலில் கனரக வாகனங்கள் நகர் பகுதிக்குள் வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகூா், கீழக்கரை.
நிழற்குடை தேவை
மதுரை ெசல்லூர் பாலம் ஸ்டேஷன் ேராடு எல்.ஐ.சி. பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் அங்கு வரும் பெண்களும், முதியவர்களும் கடும் வெயிலில் பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்தருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆதலால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
குமாா், மதுரை.
வேகத்தடை தேவை
சிவகங்கை மாவட்டம் கல்லல் இந்திரா நகர் பஸ் நிறுத்தம் அருகில் ேவகத்தடை இல்லை. எனவே இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன். இதனால் பல்வேறு விபத்துக்களும் நடைபெறுகிறது. . எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து, சிவகங்கை.
தொற்றுநோய் பரவும் அபாயம்
மதுரை மாவட்டம் கோவில்பாப்பாக்குடி ஊராட்சி சத்யா நகா் ெதரு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் முறையாக சீரமைக்கப்படாமல் உள்ளது. கால்வாய் நிரம்பி சாலையில் கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு ெதாற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயினை தூா்வார நடவடிக்கை எடுப்பாா்களா?
ராஜசேகரன், ேகாவில் பாப்பாக்குடி.
கூடுதல் மின்மாற்றி வேண்டும்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா டி.கிருஷ்ணாபுரம் கிராமம் கிழக்கு தெரு பகுதியில் 500-க்கும் ேமற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதால் மின் உபயோக பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றனா். இந்த பகுதியில் கூடுதல் மின்மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாபு, வத்திராயிருப்பு.