உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் ரகசியமாக வெளிநாடு சென்று திரும்பிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

மங்களூருவில், உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் ரகசியமாக வெளிநாடு சென்று திரும்பிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்

Update: 2022-03-23 21:01 GMT
மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் முகமது ஷெரீப். இவர் கடந்த 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை விடுப்பு எடுத்திருந்தார். அவர் தனது சொந்த வேலை காரணமாக விடுப்பு எடுப்பதாக உயர் அதிகாரிகளிடம் கூறி இருந்தார். மேலும் அவர் விடுப்பு முடிந்து பணிக்கும் திரும்பி விட்டார். 

இந்த நிலையில் அவர் தான் விடுப்பு எடுத்த நாட்களில் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் துபாய்க்கு சென்று வந்ததாக தகவல்கள் வெளியானது. இதுபற்றி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, முகமது ஷெரீப் ரகசியமாக வெளிநாட்டுக்கு சென்று வந்தது உறுதியானது. இதையடுத்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் வெளிநாடு சென்று வந்த குற்றத்திற்காக இன்ஸ்பெக்டர் முகமது ஷெரீப்பை, மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிராம் சங்கர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் மங்களூரு போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்