நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த மதனத்தூர் அய்யன் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவான 38 ஏக்கரில் 15 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்ததாகவும், சிலர் ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வசித்து வந்ததும் கண்டறியப்பட்டது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவின்பேரிலும், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி அறிவுறுத்தலின்பேரிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், குணசேகரன், தா.பழூர் வருவாய் ஆய்வாளர் தமிழரசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின்பு மதனத்தூர் அய்யன் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.