கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே உள்ள திருச்சுனையை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 72). விவசாயி. இவருடைய மனைவி ஆனந்தவள்ளி(65). இருவரும் மோட்டார் சைக்கிளில் கருங்காலக்குடிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். கருங்காலக்குடி புறவழி சாலையில் வரும்போது அந்த வழியாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி 2 பேரும் படுகாயம் அடைந்தனர். சுப்புராஜை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுப்புராஜ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.