அரசு கல்லூரியில் தியாகிகள் தினம் அனுசரிப்பு
அரசு கல்லூரியில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது
தாமரைக்குளம்
இந்திய விடுதலைக்காக பாடுபட்டு உயிர்த்தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களது தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றும் வகையிலும் பகத்சிங், சுக்தேவ் தப்பார், சிவராம் ராஜகுரு ஆகியோர் நினைவாக மார்ச் மாதம் 23-ந் தேதி தியாகிகள் நாள்-சாகித் திவாஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில், அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் மலர்விழி தலைமை ஏற்று தியாகிகள் தின உறுதிமொழியை வாசிக்க, அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் அதனை திரும்பச்சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அலகு-1, வேலுசாமி செய்திருந்தார்.