குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-23 20:31 GMT
நாகர்கோவில், 
குண்டர் சட்டத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
நாகர்கோவில் அருகே குஞ்சன்விளையை சோ்ந்த தங்ககிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வட்டவிளையை சோ்ந்த விஷ்ணு (வயது 26), முகேஷ் (24) மற்றும் கலைநகரை சேர்ந்த சுதன் என்ற நண்டுசுதன் (29) ஆகிய 3 பேர் மீது சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட 3 பேர் மீது கோட்டார், வடசேரி ஆகிய போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளன. இவர்கள் 3 பேரும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதற்கு அனுமதி கோரி மாவட்ட கலெக்டர் அரவிந்துக்கு, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் அரவிந்த் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து 3 பேரையும் சுசீந்திரம் போலீசார் நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்