தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகத்தடை அமைக்கப்படுமா?
தஞ்சை நகரில் கரந்தை பகுதியில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதியில் வாகனங்களில் வருபவர்கள் அதிவேகமாக சென்று வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் சாலையைக் கடக்கும் போது விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி வாகனங்கள் அதிவேகமாக சென்று வருவதால் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குழந்தைகள், பெரியவர்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், கரந்தை.