எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர்கள் மறுநிரப்பு வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர் பதிவு செய்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் உள்ள குறைபாடுகள் மற்றும் இதர புகார்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்குட்பட்டு எரிவாயு சிலிண்டா் வினியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். எனவே, எரிவாயு நுகர்வோர் எரிவாயு சம்பந்தமாக தங்களது குறைகளை கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.