தீக்குளித்த வாலிபர் சாவு

ஆற்காடு அருகே தீக்குளித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-03-23 18:55 GMT
ஆற்காடு

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் கபீர் சரீப் (வயது 33). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் புதுஈத்காதெருவில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.

கடந்த 21-ந் தேதி காலை குடிபோதையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துகொண்டுள்ளார். 

இதில் உடல் கருகிய அவரை ஆபத்தான நிலையில் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்