மலைக்குடிப்பட்டி மாதவராகி அம்மன் கோவில் பங்குனி திருவிழா திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்

மாதவராகி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்றது.

Update: 2022-03-23 18:55 GMT
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிப்பட்டியில் மாதவராகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பங்குனி திருவிழாவானது காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதனையொட்டி மாதவராகி அம்மனுக்கு திரளாள பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, அலகு குத்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்