மலைப்பகுதியில் தீ வைப்பதால் நகருக்குள் படையெடுக்கும் குரங்குகள்
மலைப்பகுதியில் தீ வைப்பதால் நகருக்குள் குரங்குகள் படையெடுக்கின்றன.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பெரிய மலையில் யோகலட்சுமி நரசிம்மர் கோவிலும், சிறிய மலையில் யோக ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் பரப்பளவில் மலைப்பகுதிகள் உள்ளன.
இந்த மலைப்பகுதிகளில் எண்ணற்ற குரங்குகள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள், குரங்குகளுக்கு பழம், பிஸ்ெகட் வழங்கி வருகின்றனர். தற்போது மலைப்பகுதிகளில் சமூக விரோதிகள் தீ வைத்து வருகின்றனர்.
இதனால் மலைபகுதியில் உள்ள மூலிகைச் செடிகள், மரங்கள் கருகியது. இதன் காரணமாக மலையில் உள்ள குரங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நகரத்திற்கு கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியது.
நகருக்குள் வரும் குரங்குகள் சாலைகளில் சண்டையில் ஈடுகிறது. கிழக்கு பஜார் பிள்ளையார் கோவிலில் இருந்து போஸ்ட் ஆபீஸ் தெரு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரை தொடர் சண்டையில் ஈடுபட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் அச்சத்துடன் சென்றனர்.