பொதுமக்களை அச்சுறுத்திய 10 குரங்குகள் பிடிபட்டன

சிதம்பரத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய 10 குரங்குகள் பிடிபட்டன.

Update: 2022-03-23 18:50 GMT
சிதம்பரம்,

சிதம்பரம் நகர பகுதியில் அதிக அளவில் குரங்குகள் சுற்றிவந்தன. இவைகள் வீடுகளுக்குள் புகுந்து தின்பண்டங்களை சேதப்படுத்தியும், சில நேரங்களில் பொதுமக்களை கடிக்கவும் விரட்டி வந்தன. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். 

இதையடுத்து வேங்கான் தெரு பகுதி மக்கள் 6-வது வார்டு கவுன்சிலர் சரவணன் ஏற்பாட்டின் பேரில் அப்பகுதியை  சேர்ந்த ராம்ஜி என்பவர் குரங்குகளை பிடிக்க கூண்டு வைத்தார். 

இதில் 10 குரங்குகள் சிக்கின. இது பற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் நேரில் வந்து குரங்குகளை பிடித்து பாதுகாப்பாக வேப்பூர் காப்புகாட்டுக்கு கொண்டு சென்று விட்டனர். சிதம்பரம் பகுதியில் மேலும் சுற்றி வரும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்