ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை

கண்டமங்கலம் அருகே ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-23 18:24 GMT
கோப்புப்படம்
புதுச்சேரி,

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இன்று காலை 10 மணியளவில் பயணிகள் ரெயில் வந்தது. இந்த ரெயில் விழுப்புரம்- புதுச்சேரி இடையே கண்டமங்கலம் அருகே ஆழியூர் பகுதியில் வந்தபோது ஒருவர் திடீரென்று தண்டவாளத்தில் திடீரென்று தலை வைத்து படுத்தார்.

ஆனால் அதற்குள் ரெயில் மோதியது. இதனால் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தி இறங்கி வந்து பார்த்தபோது, தலை துண்டாகி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதுபற்றி அவர் தகவல் தெரிவித்ததன்பேரில் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அங்கு கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்