நாக மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நாக மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-03-23 18:05 GMT
கரூர்
நச்சலூர், 
குளித்தலை வட்டம், பொய்யாமணி ஊராட்சி, பங்களாபுதூரில் பிரசித்தி பெற்ற நாக மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா கணபதி, பாலமுருகன், மலையாள சுவாமி உள்பட பரிவார தெய்வங்கள் உள்ளன. இங்கு புதிதாக கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்தனர். தொடர்ந்து முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் நாக மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்