பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் பூவரசன் (வயது 22). எம்.ஏ. பட்டதாரி. இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்த பூவரசன் சிறுமியை அழைத்து கொண்டு நேற்று ஊருக்கு வந்தார். இதையடுத்து போலீசார், சிறுமியை கடத்தி சென்ற பூவரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.