தாமரை குளக்கரையில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி

திருவண்ணாமலை தாமரை குளக்கரையில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-03-23 17:52 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலையம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் கடந்த 18-ந்தேதி நடைபெற்றது. 

பின்னர் மண்டகபடி, நலங்கு உற்சவம், ஊஞ்சல் உற்சவம் ஆகியவை கோவிலில் நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவ நிறைவு நாளான நேற்று திருவண்ணாமலை தாமரை குளக்கரையில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக அம்பாளுடன் அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியம் முழங்க கோவிலில் இருந்து தாமரை குளம் வரை ஊர்வலமாக வந்தார். அப்போது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

பின்னர் தாமரை குளத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. 

மேலும் செய்திகள்