கிருஷ்ணகிரியில் தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கு

கிருஷ்ணகிரியில் தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கு நடந்தது.

Update: 2022-03-23 17:51 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வரவேற்றார். சேலம் மண்டல வேலைவாய்ப்புத்துறை இணை இயக்குனர் லதா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அனுராதா வாழ்த்தி பேசினார். இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கண்காட்சியை திறந்து வைத்தும், கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கினர். 
தொடர்ந்து போட்டித்தேர்வுகள், வேலைவாய்ப்பு குறித்து, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சுந்தரம் பேசினார். வாழ்கை வெற்றி பெறுவதற்கே என்கிற தலைப்பில் நிமலன் மரகதவேல் பேசினார். வங்கியில் வேலைவாய்ப்பு மற்றும் கடனுதவிகள் தொடர்பாக, முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன் பேசினார். முன்னதாக வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் வெளியிட்டு மாணவர்களுக்கு வழங்கினார். முடிவில் கல்லூரி உதவி பேராசிரியர் வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார். இந்த கருத்தரங்கில் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்