ஓசூரில் பரிதாபம் காதல் மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தற்கொலை
ஓசூரில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மோரனப்பள்ளியை சேர்ந்தவர் மத்தூரப்பா. இவரது மகன் சேத்தன் (வயது 22). தொழிலாளி. இவரது மனைவி அகிலா. இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த மாதம் 8-ந்தேதி திருமணம் கொண்டனர். இந்தநிலையில் அகிலா திடீரென கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த சேத்தன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.