ராசிபுரத்தில் சூறாவளி காற்றுடன் திடீர் மழை
ராசிபுரத்தில் சூறாவளி காற்றுடன் திடீரென மழை பெய்தது.
ராசிபுரம்:
ராசிபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மழை பெய்தது. அதேபோல் நேற்று மதியம் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. பலத்த காற்றுக்கு சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள், பதாகைகள் பறந்தன. மழையால் மாலையில் வெயிலின் தாக்கம் குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.