அமராவதி ஆற்றில் தண்ணீர் எடுத்த 15 மின் மோட்டார்கள் பறிமுதல்

அமராவதி ஆற்றில் தண்ணீர் எடுத்த 15 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-03-23 17:46 GMT
கரூர்
கரூர், 

கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்று பகுதிகளில் குழாய் பதித்து மின்மோட்டார் மூலம் சட்டவிரோதமாக தண்ணீரை உறிஞ்சி எடுத்து வருவதாகவும் எனவே அவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 

அதன்படி மண்மங்கலம் தாசில்தார் ராதிகா மற்றும் அமராவதி வடிநில உப கோட்ட உதவி பொறியாளர் ராஜகோபால் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் மண்மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட தாளப்பட்டி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அமராவதி ஆற்றில் குழாய் பதித்து மின் மோட்டார் மற்றும் ஆயில் என்ஜின் வைத்து சட்டவிரோதமாக நீரை உறிஞ்சி எடுத்து வந்த 15 மின் மோட்டார்கள் மற்றும் குழாய்களை பறிமுதல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்