வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-03-23 17:39 GMT
திருப்பத்தூர், 
திருப்பத்தூர் அருகே திருவிடையார்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையா மகன் நாகராஜன் (வயது30). இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.  இவருக்கு திருமணத்திற்காக குடும்பத்துடன் பெண் பார்க்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது. வீடு திரும்பியவுடன் தனக்கு பார்த்த பெண் பிடிக்கவில்லை என்று நாகராஜன் தனது பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.  இந்தநிலையில் நாகராஜன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொைல செய்துகொண்டார். தகவல் அறிந்து திருப்பத்தூர் டவுன் போலீசார், நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்