ஜாமீனில் வந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

மேல்மலையனூர் அருகே ஜாமீனில் வந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-23 17:27 GMT
திண்டிவனம், 

மேல்மலையனூர் அருகே உள்ள அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் ராமலிங்கம் (வயது 40) விவசாயி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த ஆடு மேய்க்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமலிங்கம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் ஜாமீனில் வந்ததில் இருந்து மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் ராமலிங்கம் நேற்று முன்தினம், தனது மாமனார் ஊரான சண்டிசாட்சிக்கு சென்று, அங்குள்ள மாமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்