சங்கராபுரம் அருகே இரு தரப்பினர் மோதல் 4 பேர் மீது வழக்கு

சங்கராபுரம் அருகே இரு தரப்பினர் மோதல் 4 பேர் மீது வழக்கு

Update: 2022-03-23 16:33 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணு மகன் திருப்பதி(வயது 49). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சோலை மகன் பிரகாஷ் (26) என்பவருக்கும் தியாகராஜபுரம் குளம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று திருப்பதி சங்கராபுரம் பூட்டை சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது அவரை பிரகாஷ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வழிமறித்து ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பிரகாஷ், கார்த்திக், சிவகுமார் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

அதேபோல் சங்கராபுரம் பூட்டை சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பிரகாசை திருப்பதி வழிமறித்து ஆபசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் திருப்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்