மஸ்தான் சாகிப் தர்கா கந்தூரி விழாவில் சந்தன கூடு ஊர்வலம்

மஸ்தான் சாகிப் தர்கா கந்தூரி விழாவில் சந்தன கூடு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-03-23 16:28 GMT
காரைக்கால், மார்ச்.23-
காரைக்கால் மஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் தர்காவில் 199-வது கந்தூரி விழா கடந்த 13-ந் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 10-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு சந்தனகூடு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளிவாசலில் இருந்து இரவு 11 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது. தொடர்ந்து காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக விடிய, விடிய சென்று இன்று அதிகாலை மீண்டும் பள்ளிவாசலை ஊர்வலம் அடைந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்களுடன் இந்து, கிறிஸ்தவ மதத்தினரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்