கடன் பிரச்சினையால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் பிரச்சினையால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-23 14:25 GMT
பொன்மலைப்பட்டி, மார்ச்.24-
கடன் பிரச்சினையால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவில் என்ஜினீயர்
திருச்சி மேல கல்கண்டார்கோட்டை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 34). சிவில் என்ஜினீயரான இவருக்கு  திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
இந்தநிலையில் சந்தோஷ்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டி தருவதாக கூறி 9 பேரிடம் பணம் வாங்கியுள்ளார். இதனிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக வீடுகளை கட்டி கொடுக்க முடியாமல் போனது. ஊரடங்கிற்கு பின்னர் வீடு கட்டுவதற்கான வேலைகளை தொடங்கும்போது கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமான பொருட்களை வாங்குவதற்காக அதிக கடன் வாங்கியுள்ளார்.
தற்கொலை
இந்நிலையில் கடன் பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளான சந்தோஷ்குமார்  நேற்று முன்தினம் விவேகானந்தர் நகர் பகுதியில் உள்ள கட்டுமானம் நடந்து கொண்டிருந்த ஒரு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்