படப்பை குணாவுக்கு 340 நாட்கள் சிறை: நன்னடத்தையை மீறியதால் நடவடிக்கை
நன்னடத்தையை மீறியதால் படப்பை குணாவுக்கு 340 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுங்குவார்சத்திரம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி படப்பை குணா (வயது 44). இவர் குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 19-ந் தேதியன்று காவலில் இருந்து குணா ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட செயல்துறை நடுவர் அவர்களிடம் அளித்திருந்த நன்னடத்தை உறுதிமொழி மீறினார். இதனால் 340 நாட்கள் சிறை தண்டனை அவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.