வல்லநாடு சிவன் கோவிலில் சுவாமி, அம்பாள் மீது சூரிய ஒளி விழுந்த அதிசயம்

வல்லநாடு சிவன் கோவிலில் சுவாமி, அம்பாள் மீது சூரிய ஒளி விழுந்த அதிசய நிகழ்வு நடந்தது

Update: 2022-03-23 12:43 GMT
தூத்துக்குடி:
வல்லநாடு சிவன் கோவிலில் சுவாமி- அம்பாள் மீது சூரிய ஒளி விழுந்த அதிசய நிகழ்வு நடந்தது.
பழமையான கோவில்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆவுடையம்பாள் உடனுறை திருமூலநாதர் கோவில் உள்ளது. பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில், மூலவர் மீது சூரிய ஒளி விழும் விதத்தில் கட்டிடக்கலை அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 21, 22, 23 மற்றும் செப்டம்பர் மாதம் 21, 22, 23 தேதிகளில் இந்தக் கோவிலில் சுவாமி மற்றும் அம்பாள் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்து வருகிறது.
சூரிய ஒளி விழுந்தது
இந்த நிலையில் நேற்று பஞ்சாங்க கணிப்பின்படி காலை 6.19 மணிக்கு சூரிய ஒளிக்கதிர்கள் ஆவுடையம்பாள் மற்றும் திருமூலநாதர் மூலவர் மீது பட்டு ஒளி வீசியது.
இந்த அற்புதக் காட்சியைக் கண்ட பக்தர்கள், ‘தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்று பக்திப் பரவசத்துடன் கோஷமிட்டு தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்