கூத்தம்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கலை நிகழ்ச்சி மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு

கூத்தம்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கலை நிகழ்ச்சி மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-03-23 11:52 GMT
அணைக்கட்டு

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள கூத்தம்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு எய்ட்ஸ் மற்றும் காசநோய், பால்வினைநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சிவா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சி மூலம் எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்கும் முறைகள், நோயின் அறிகுறிகள் மற்றும் தாக்கம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அதிசய ரூபன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ராணி. களப்பணியாளர் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் நிர்மல்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்