நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்

தூத்துக்குடியில் நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்

Update: 2022-03-23 11:34 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை நில அளவை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்த போராட்டம்
தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு  மாவட்ட தலைவர் அண்ணாமலை பரமசிவன் தலைமை தாங்கினார். நில அளவை கள பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்து பணியை முறைப்படுத்த வேண்டும். நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். களப்பணியாளர்கள், வரைவாளர், அமைச்சுப் பணியாளர்களை ஒருங்கிணைக்கும் முன்மொழிவுகள் கைவிடப்படும் என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்த வாக்குறுதியை உத்தரவாதப்படுத்த வேண்டும். நிலுவை மனுக்களை காரணம் காட்டி மேற்கொள்ளும் மாவட்டம் மாறுதல்களையும், ஒழுங்கு நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். ஆய்வாளர்கள் மற்றும் துணை ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். நில அளவை துறையை சி.எல்.ஏ வுடன் இணைக்கும் ஆலோசனையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
கலந்து கொண்டவர்கள்
இதில் மாவட்ட செயலாளர் காளிராஜ், மாவட்ட பொருளாளர் சக்தி வேல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் செந்தூர் ராஜன், தமிழ்நாடு வணிக வரி சங்க மாவட்ட செயலாளர் சங்கர், வருவாய் துறை அலுவலர் சங்கம் மாவட்ட இணை செயலாளர் ஞான ராஜ், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராம மூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்