பாபநாசத்தில் உலக தண்ணீர் தினம் கொண்டாட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் உறுதிமொழி ஏற்பு

பாபநாசத்தில் உலக தண்ணீர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது

Update: 2022-03-22 23:20 GMT
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசத்தில் உலக தண்ணீர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கலெக்டர் விஷ்ணு தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
உலக தண்ணீர் தினம்
பாபநாசத்தில் குருவனம் சார்பில் மணிமுத்தாறு, அகத்தியமலை மக்கள் சார் இயற்கை மலை காப்பு மையம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சூழல் மேம்பாட்டு அமைப்பு இணைந்து நேற்று உலக தண்ணீர் தின நாளை கொண்டாடியது. 
இதையொட்டி பாபநாசம் கோவில் படித்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்.
இதையொட்டி அங்கு உறுதி மொழி ஏற்கப்பட்டது. “தாமிரபரணியை மாசுபடுத்தாமல் பாதுகாப்போம். குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம். அடுத்த தலைமுறைக்கும் தண்ணீரை கொண்டு செல்வோம்” என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் 200 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ஓவியம் மற்றும் கவிதை போட்டி, தாமிரபரணி நதிக்கரையில் பிரபல ஓவியர்கள் வரைந்த ஓவியக் கண்காட்சி, தாமிரபரணி நதி தூய்மைப்பணி, விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம், விழிப்புணர்வு பேரணி போன்றவை நடைபெற்றது.
ஆய்வு
தொடர்ந்து பாபநாசத்திற்கு வரும் பயணிகளுக்கு வசதியாக வாகனங்கள் நிறுத்துமிடம், உலர் கழிப்பிடம் அமைப்பதற்கான இடங்களை கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்தார். 
மேலும் சென்னை கூத்துப்பட்டறை மாணவர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிந்து, தாசில்தார் வெற்றிச்செல்வி, மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், துணை கண்காணிப்பாளர் பிரதாபன், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் செல்வசுரேஷ் பெருமாள், ஆணையாளர் கண்மணி, சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜன், பணி மேற்பார்வையாளர் சரவணன், குருவனம் நிறுவனர் ஓவியர் சந்ரு, மூத்த ஆராய்ச்சியாளர்கள் சுபத்ரா, மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருவனம் ஒருங்கிணைப்பாளர் நல்லையா ராஜ் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்