கூடங்குளம்: 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்
நெல்லை :
நெல்லை மாவட்ட குடிமை பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் ஆகியோர் தலைமையில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கூடங்குளம் அருகே உள்ள சுனாமி காலனியில் ஒரு வீட்டில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்ததாக தகவல் கிடைத்தது. தொடர்ந்து அங்கு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்தனர். அதை பதுக்கி வைத்ததாக அந்த ஊரைச் சேர்ந்த டெரன்ஸ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.